/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/15_77.jpg)
மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாவீரன்'. இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். பரத் சங்கர் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டைட்டில் வீடியோ மற்றும் முதல் பாடலான ‘ஸீனா ஸீனா’ லிரிக் வீடியோ ஆகியவை முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இதனை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும் 'வீரமே ஜெயம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் அடுத்ததாக கமல் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ளார். சாய்பல்லவி ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் காஷ்மீரில் ஆரம்பமாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இவரது நடிப்பில் 'அயலான்' படம் உருவாகி வருகிறது. புதிதாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
My dear brothers and sisters, see u in theatres #MaaveeranFromAugust11th ??
வீரமே ஜெயம் ??#Maaveeran#Mahaveerudu#VeerameJeyam@madonneashwin@AditiShankarofl@DirectorMysskin@ShanthiTalkies@iamarunviswa@vidhu_ayyanna@philoedit@bharathsankar12@iYogiBabu… pic.twitter.com/TRzMmRrXHM
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) April 22, 2023
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)