maaveeran ott update

மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14 ஆம் தேதி வெளியான படம் 'மாவீரன்'. இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

Advertisment

பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ள நிலையில், நல்ல வரவேற்பை பெற்றது. படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் ஷங்கர், நடிகர் அருண் விஜய் உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 11 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதனைத்தனது ட்விட்டர் பக்கம் மூலம் ப்ரைம் நிறுவனம் தெரிவித்து ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் ஒன்றைப்பகிர்ந்துள்ளது.