ADVERTISEMENT

"இந்து ஒற்றுமையை காட்டுங்கள்" - 'நெஞ்சுக்கு நீதி' படம் குறித்து காயத்ரி ரகுராம் கருத்து

03:36 PM May 21, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

அனுபவ் சின்ஹாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆர்டிக்கள் 15'. இந்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தமிழில் 'நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் அருண்ராஜா காமராஜ் இயக்க உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருந்தார். நேற்று (20.5.2022) வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு, சினிமா விமர்சகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் 'நெஞ்சுக்கு நீதி' படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "ஆர்டிகல் 15 திரைப்படம் பாஜக அரசால் வரவேற்கப்பட்டது. சமத்துவ ஒற்றுமைக்காக பாஜக அரசால் கொண்டாடப்பட்டது என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். ஆனால் திமுக உண்மைக்கு கடுமையான மாறான வசனங்களுடன் திரைப்படத்தை ஸ்டிக்கர் ஒட்டி திராவிடமயமாக்குகிறது. இது நெஞ்சுக்கு நீதி. பலாத்காரத்தில் சாதி இல்லை. அது ஒரு மனிதனின் கொடூரமான மனம். கற்பழிப்புக்கு காரணம் குறிப்பிட்ட சாதிப் பெண்கள் மட்டும் அல்ல. கற்பழிப்புக்கு வயது இல்லை. சிலர் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர். துரதிருஷ்டவசமாக பலர் கற்பழிக்கப்படுகிறார்கள். நெஞ்சுக்கு நீதி திரைப்படம் பிராமண அவதூறு, பிராமண சகோதர சகோதரிகளின் அவதூறுகளுக்கு எதிராக அனைத்து இந்துக்களும் எழுந்து நிற்க வேண்டிய நேரம் இது. அனைத்து சாதி இந்து ஒற்றுமைக்காக பிராமணர்களுக்கு மட்டுமின்றி இந்து ஒற்றுமையை காட்டுங்கள். இன்று எந்த பிராமணர்களோ எந்த ஜாதியினரோ எந்த அட்டவணை ஜாதியினரையும் தவறாகப் பேசுவதில்லை. இந்த படம் சாதியை மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளது. இன்று பிசிஆர் சட்டம் யார் வேண்டுமானாலும் தண்டிக்கப்படும் அளவுக்கு வலுவாக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT