It was the BJP that carried out man incident in Manipur and Gujarat Minister Udayanidhi Stalin

Advertisment

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் செய்து அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கியும், திமுக இளைஞர் அணி சார்பில் நடத்தப்படும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடி மாவட்ட திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் திமுகவை சேர்ந்த ஆயிரம் மூத்த முன்னோடிகளுக்கு தூத்துக்குடி தெற்கு மற்றும் வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் தலா ரூ.10 ஆயிரம் பொற்கிழி வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில், “மணிப்பூரிலும் குஜராத்திலும் இனப்படுகொலை நடத்தியது பாஜகதான். அதிமுக எனும் புதருக்குள் ஓளிந்து கொண்டு தமிழ்நாட்டில் நுழைய முயலும் பாஜக என்னும் விஷப்பாம்பை விரட்ட வேண்டும். பாஜக வை ஒழிக்க வேண்டும் என்றால் அதிமுகவையும் அழிக்க வேண்டும். சனாதனக் கோட்பாடுகளை ஒழிக்கும் வரை திமுக போராடிக் கொண்டே தான் இருக்கும். தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டுமென்றால் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். இந்தியாவுக்கே வழிகாட்டுகின்ற தேர்தலாக 2024 நாடாளுமன்றத் தேர்தல் அமைய வேண்டும்” என தெரிவித்தார்.