ADVERTISEMENT

கூட்டு சேர்ந்த நான்கு நட்சத்திரங்கள்... மணிரத்னம் கொடுத்த இன்ப அதிர்ச்சி! 

01:15 PM May 01, 2018 | santhosh


மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் 'செக்கச் சிவந்த வானம்'. கடைசியாக கார்த்தி நடிப்பில் 'காற்று வெளியிடை' படத்தை இயக்கிய மணிரத்னம் தற்போது அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் ஆகிய முன்னணி நட்சத்திரங்களை வைத்து 'செக்கச் சிவந்த வானம்' படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் தனித்தனியாக படமாக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நான்கு பேரும் இணைந்து படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோர் படப்பிடிப்பு தளத்தில் அமர்ந்திருப்பது போல் படம் வெளியாகியுள்ளது. ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கும் இப்படத்தில் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹிடாரி, டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலி கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT