
மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் 'செக்கச் சிவந்த வானம்'. 'காற்று வெளியிடை' படத்தை இயக்கிய மணிரத்னம் தற்போது அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் ஆகிய முன்னணி நட்சத்திரங்களை வைத்து 'செக்கச் சிவந்த வானம்' படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை தனித்தனியாக வைத்து படமாக்கிக்கொண்டிருந்த மணிரத்னம் பின்னர் நான்கு பேரும் இணைந்து நடிக்கும் காட்சிகளை படமாக்கினர். அப்படி நால்வரும் கூட்டணி அமைத்து நடிக்கும் காட்சிக்காக படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலானது. அதில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோர் படப்பிடிப்பு தளத்தில் அமர்ந்திருப்பது போல் இருந்தது. இந்நிலையில் மீண்டும் இதே போல் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு, நடிகர் சிம்பு ஊட்டிவிடுவது போன்ற புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.