ADVERTISEMENT

ரஜினி ரூ.100 கோடி, ரஹ்மான் ரூ.94.8 கோடி, விஜய், அஜித் எவ்வளவு சம்பளம் வாங்கிருக்காங்க தெரியுமா?

01:32 PM Dec 19, 2019 | santhoshkumar

2019ஆம் ஆண்டிற்கான இந்தியளவில் பிரபலங்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் தென்னிந்தியாவை பொறுத்தவரையில் ரஜினி முதலிடத்தை பெற்றிருக்கிறார். இந்தியா முழுவதுமான 100 பேர் கொண்ட பட்டியலில் ரஜினி 13 வது இடத்தையும், ஏ.ஆர். ரஹ்மான் 16வது இடத்தையும் பிடித்திருக்கின்றனர். இவர்களை தொடர்ந்து இன்னும் சில பிரபலங்கள் 100 பேர் கொண்ட பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

ADVERTISEMENT


இந்திய அளவிலான பட்டியலில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, முதலிடம் பிடித்துள்ளார். அக்டோபர் 1, 2018 முதல் செப்டம்பர் 30, 2019 வரை ரூ. 253 கோடி வருமானம் ஈட்டியுள்ளார் விராட் கோலி. பட்டியலில் அக்‌ஷய் குமாருக்கு 2ஆம் இடமும் சல்மான் கானுக்கு 3ஆம் இடமும் அமிதாப் பச்சனுக்கு 4ஆம் இடமும் தோனிக்கு 5ஆம் இடமும் கிடைத்துள்ளன.

ADVERTISEMENT


மேலும் இந்த பட்டியல் என்பது பிரபலம் மற்றும் அவர்கள் பெரும் சம்பளம் ஆகியவற்றவை கொண்டு பட்டியலிடப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் தென்னிந்தியளவில் ரஜினி முதலிடமும் ரூ. 100 கோடி வருமானமும் ஈட்டியுள்ளார். ரூ. 94.8 கோடி வருமானத்துடன் ஏ.ஆர். ரஹ்மான் தென்னிந்தியளவில் இரண்டாவது இடத்தையும் இந்தியளவில் 16 இடத்தைப் பிடித்துள்ளார். ரூ. 30 கோடி வருமானத்துடன் விஜய் தென்னிந்தியளவில் 5ஆம் இடமும், இந்தியளவில் 47ஆம் இடமும் ரூ. 40.5 கோடியுடன் அஜித் தென்னிந்தியளவில் 6ஆம் இடமும் இந்தியளவில் 52-ம் இடமும் பிடித்துள்ளார்கள். கமலின் ஆண்டு வருமானம் ரூ. 34 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த தென்னிந்திய சினிமா பிரபலங்கள்


13. ரஜினி
16. ஏ.ஆர். ரஹ்மான்
27. மோகன் லால்
44. பிரபாஸ்
47. விஜய்
52. அஜித்
54. மகேஷ் பாபு
55. ஷங்கர்
56. கமல்
62. மம்மூட்டி
64. தனுஷ்
77. திரிவிக்ரம்
80. இயக்குநர் சிவா
84. கார்த்திக் சுப்புராஜ்

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT