உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் போன்று மக்கள் மனதில் நீங்காத படங்களை கொடுத்தவர். ரஜினிகாந்தின் ஸ்டைலை மட்டுமே நம்பி படம் எடுத்தவர்கள் மத்தியில் ரஜினியின் நடிப்புக்கு தீனிப் போட்டவர். பல படங்களில் விரலை உயர்த்தி, கண்ணை உயர்த்தி பஞ்ச் வசனங்கள் பேசி வந்த ரஜினியை சாதரணமாக ‘கெட்டப் பையன் சார் இந்த காளி’ என்று பேச வைத்து அதையும் மக்கள் ஏற்றுக்கொள்ளும்படி செய்தவர்தான் இயக்குனர் மஹேந்திரன். இப்படி தன்னுடைய படங்களுக்கென தனி ஒரு பாதையை வகுத்திருந்தார். அக்காலகட்டத்தில் நாடகத் தன்மையாக இருந்து வந்த தமிழ் சினிமாவை ரியாலிட்டி சினிமாவாக மாற்ற முயற்சித்த ஒருசிலரில் இவரும் ஒருவர். இதனால்தான் இவரை மக்களின் இயக்குனர் என்றும் கூட சிலர் அழைக்கிறார்கள்.

mahe

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

பல நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்த மஹேந்திரன், இன்று காலை காலமானார். பள்ளிக்கரணையிலுள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக அவருடைய உடல் வைக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் மஹேந்திரன் திரையுலகில் கதை எழுத்தாளராக தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கினார். பின்னர், 1978ஆம் ஆண்டு முள்ளும் மலரும் படத்தில் இயக்குனராக அறிமுகமாகினார். 1992ஆம் ஆண்டு வரை இயக்குனராக வலம் வந்தவர். பெரிய இடைவேளைக்கு பிறகு 2006ஆம் ஆண்டு ‘சாசனம்’ என்றொரு படத்தை இயக்கினார். இப்படத்தில் அரவிந்த் சாமி, கௌதமி, ரஞ்சிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாக இருந்த சமயத்தில் இயக்குனர் மஹேந்திரன் ஒரு பேட்டியில், “எனக்கு அஜித்தை வைத்து ஒரு ஸ்போர்ட்ஸ் படம் எடுக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது” என்று தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கு பின் எந்த ஒரு செய்தியும் அது குறித்து வெளியாகவில்லை.

mahei

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இதனையடுத்து ‘உதிராதப்பூக்கள்’ என்ற தலைப்பில் கருணாஸை முக்கிய கதாபாத்திரத்தில் வைத்து இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே நிறுத்தப்பட்டது. பெரிய இடைவேளைக்கு பின்னர் திரையுலகிற்கு வந்தவர் மீண்டும் ஒரு இடைவேளை எடுத்துக்கொண்டார்.

2005ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘சச்சின்’ படத்தை இயக்கியது மஹேந்திரனின் மகன் ஜான்தான். இந்த படத்திலிருந்தே இயக்குனர் மஹேந்திரனுக்கும் விஜய்க்கும் நட்பு இருந்ததா என தெரியவில்லை. இதுவரை இயக்குனராக திரையுலகிற்கு தெரியவந்த மஹேந்திரன் 2016ஆம் ஆண்டில் விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்தில் விஜய்க்கு வில்லனாக தமிழ் திரையுலகில் ரீ-எண்ட்ரி கொடுத்தார். தெறி இசை வெளியீட்டு விழாவில் விஜய் ஒரு மகா நடிகன், தன்னுடைய உயரத்தை பற்றி நினைக்காமல் செட்டில் மிகவும் அமைதியாக இருப்பவர், அவருடைய படத்தில் என்னை வில்லனாக நடிக்க வைக்க ஒப்புக்கொண்டது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது என்று விஜயை புகழ்ந்து பேசினார். தெறி படத்தில் மஹேந்திரனுடைய நடிப்பு வெற்றியடைய, தொடர்ந்து அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. ரஜினியை வைத்து இயக்கியவர், கடைசியாக அவரின் ‘பேட்ட’ படத்தில் ரஜினி உடன் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்தும்விட்டார்.

எழுத்தாளர், இயக்குனர், நடிகர் என கால் பதித்த துறைகள் அனைத்திலும் வெற்றிக்கொடி நாட்டிய இவர் இன்று தான் நேசித்த திரையுலகை பிரிந்து சென்றிருந்தாலும், இவரின் படைப்புகள் திரையுலகம் உள்ள வரை இவரின் பெயரை உச்சரிக்க வைத்துக் கொண்டே இருக்கும் என்பதே நிதர்சனம்.