ADVERTISEMENT

"நம்மள யாரும் ஒன்னும் பண்ண முடியாது" - கவனம் ஈர்க்கும் சூர்யா பட டீசர்

06:00 PM Feb 18, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார், சூரி, வினய் ராய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் வெளியான படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆக்சன் அதிரடி கலந்த இந்த டீசர் தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT