/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/135_10.jpg)
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார், சூரி, வினய் ராய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த ட்ரைலரில் "சந்தோஷத்துல பெரிய சந்தோஷமே அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பாக்குறதுன்னு" சூர்யா சொல்ல, அதற்கு "இது பாக்கியராஜ் சொன்னதாச்சேன்னு" மற்ற நடிகர் ஒருவர் சொல்வது பலரையும் ரசிக்கும் படி வைத்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)