Etharkkum Thunindhavan movie trailer date announced

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார், சூரி, வினய் ராய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

சமீபத்தில் வெளியானபடத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தின் ட்ரைலர்ரீலிஸ்குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி எதற்கும் துணிந்தவன் படத்தின் ட்ரைலர்மார்ச் 2 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் படக்குழு ப்ரோமோ வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், சரண்யா பொன்வண்ணனோ"தம்பி இன்னும் ரெடி ஆகலையான்னு" கேட்க, சத்யராஜோ"நா ரொம்ப ஆர்வமா இருக்கன்னு..." சொல்ல, அதற்குசூர்யா "அன்னெஸ்பெக்டடா இருக்கும் இருக்கட்டும்விடு..." என்று சொல்வது பலரையும் ரசிக்கும் படி வைத்துள்ளது.

Advertisment