ADVERTISEMENT

ஈஸ்வரன் படக்குழு கொடுத்த அதிரடி அப்டேட்!

06:43 PM Dec 11, 2020 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு, இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஈஸ்வரன்' படத்தில் நடித்து வருகிறார். ஒரு மாத காலத்திற்கும் குறைவான நாட்களில், இப்படத்தை நடித்து முடித்துள்ளதால், சிம்புவின் சினிமா வாழ்க்கையில் குறைந்த நாட்களில் எடுக்கப்பட்ட படமாக இப்படம் அமைந்துள்ளது. மேலும், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிம்புவின் தோற்றம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

இந்தநிலையில், இப்படத்தின் முதல் பாடல் வரும் 14-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தகவலை, நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து உற்சாகமடைந்த சிம்பு ரசிகர்கள், சமூக வலைதளங்களில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT