ADVERTISEMENT

விஜய் நடித்த கேரக்டருக்கு அஜித் ஆசைப்பட்டார்! - இயக்குனர் விண்செண்ட் செல்வா பகிர்ந்த சுவாரசிய நினைவுகள்

03:00 PM Apr 22, 2019 | george@nakkheeran.in

பிரியமுடன், யூத் போன்ற விஜய்யின் வெற்றிப்படங்களை இயக்கியவர் இயக்குனர் விண்செண்ட் செல்வா. அவர் தனது முதல் படத்திலேயே விஜயுடன் இணைந்த சுவாரசியமான சம்பவங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

நான் ஃபிலிம் இன்ஸ்ட்யூட்டில் படிக்கும்போது ஒரு ஷாட் ஃபிலிம் எடுத்தேன். ‘மண்ணில் இந்த காதல்’னு தலைப்பு வச்சுருந்த அந்த ஷாட் ஃபிலிமுக்காக கே.பாலச்சந்தர் கையால் எனக்கு கோல்டு மெடல் கிடைச்சுது. அந்த காலகட்டத்தில் என் ஷாட் ஃபிலிமை நிறைய பெரிய ஆட்கள் பார்த்துப் பாராட்டினார்கள். அப்படித்தான் அந்த ஷாட் ஃபிலிமை விஜயிடமும் காட்டினேன். அவருக்கும் ரொம்போ பிடித்திருந்தது. தோடர்ந்து அவருடைய நண்பர் வீட்டுக்குக் கதைச் சொல்ல கூப்பிட்டார். நான் அவரிடம் “எனக்கு பெருசா கதைச் சொல்ல தெரியாது. இன்டெர்வெல் வரைக்கும் சொல்வேன், அது பிடித்திருந்தால் கண்டிப்பாக எனக்குப் படவாய்ப்புக் கொடுக்கணும்” அப்படின்னு ஒரு கண்டிஷன் போட்டேன். விஜய் சிரிச்சுக்கிட்டெ “சொல்லுங்கண்ணா, சொல்லுங்க”னு சொன்னார்.

ஒரு ஐந்து நிமிடக்கதையைச் சொல்லிவிட்டு நிறுத்திட்டேன். அவர் மேல சொல்லுங்கண்ணா என்றார். இதுக்கு மேல கதைச் சொன்னால் கண்டிப்பா வாய்ப்புக் கொடுக்கணும் சார்னு சொல்லும்போதே சொல்லுங்கண்ணா பார்க்கலாம்னு சொன்னார். நானும் முழுக் கதையைச் சொல்லி முடிச்சுட்டேன். அதுதான் ‘பிரியமுடன்’. அந்தக்கதையில் இரண்டு கேரக்டர், ஒன்று பாசிட்டிவ், இன்னொன்று நெகட்டிவ். அதிலும் பொசசிவின் எக்ஸ்ட்ரீமான கேரக்டர். தமிழ் சினிமாவில் அந்த மாதிரி பண்ணனும்னு நிறைய ஹீரோக்களுக்கு ஆசையிருந்தது. ஆனால், யார் பூனைக்கு மணிக்கட்டுறது. ஏனென்றால், ஹீரோ இமேஜ் போயிடுமோ என்று பயப்புடுவாங்க. ஆனால், விஜய் என்னுடைய இமேஜயே நீங்கள் பார்க்காதீங்கன்னு சொல்கிறார், எஸ்.ஏ.சி சார் வேண்டாம் என்று சைகை காட்டுகிறார். எனக்கும் மனதிற்குள் ஒரு பயம் இருந்தது, விஜய்க்கு பெண் ரசிகர்கள் அதிகம் இருந்தார்கள், ஏதாவது பிரச்சனை வருமோ என்று நினைச்சுக்கிட்டேன். அதனால், விஜய் நீங்க பாசிட்டிவ் கேரக்டர் பண்றீங்களான்னு கேட்டேன். நீங்கள் என்ன நினைக்குறீங்கன்னு அவர் என்னிடம் திருப்பிக் கேட்டார்.

இது வேறமாதிரி கேரக்டர்ன்னு சொன்னென். விஜய்யும் அந்தக் கேரக்டர் மேல் மிக அதிகமான நம்பிக்கை வச்சுருந்தார். 7 படம் நடித்த பிறகுதான் இந்தப் படத்தில் அவர் நடிக்க முடியும். அப்படியிருந்தும் பிரியமுடன் நடித்தாகணும்னு உறுதியாக இருந்தார். எந்த புரடக்‌ஷனும் ஒத்துக்கவில்லை. விஜய் “யார் இந்தப் படத்தை எடுக்கிறார்களோ அவர்களுக்குகாக நான் இன்னோரு படம் நடிக்கிறேன்” என்றுகூட சொன்னார். அப்போ விஜயை வைத்து எஸ்.ஏ.சி சார் ஒரு படம் டிரைக்ட் பண்ணுறதா பூஜையெல்லாம் போட்டு ரெடியாக இருந்துச்சு. அவரிடம் விஜய் “நான் யார் கிட்ட கெஞ்சுறது? நீங்கதான் எனக்கு விட்டுக்கொடுக்கணும்”னு கேட்டு எஸ்.ஏ.சி சாரின் படத்தை தள்ளிப் போட்டுவிட்டு ‘பிரியமுடன்’படத்தில் நடித்தார். விஜய் “கண்டிப்பா நெகட்டிவ் கேரக்டரில் தான் நடிக்கப்போறேன், இதில் சமரசமே பண்ணாதீங்க”அப்படினு சொல்லியிருந்தார்.

கிளைமேக்ஸில் விஜய் சாகணும், விஜய்யின் அப்பா அதற்கு ஒத்துக்கலை. ஒரு நல்ல ரசிகர்கள் இருக்காங்க அப்படினு தயங்கினார். விஜய் தான் என் கெரியரில் இப்படி ஒரு கேரக்டரில் கண்டிப்பா நடிக்கணும்னு சொல்லி அவரை சமாதானப்படுத்தினார். ஒரு முக்கியமான சீன் இருக்கு, ஆனால் அது படத்தில் வரலை. எந்த படத்தை எடுத்துக்கொண்டாலும் நெகட்டிவ் கேரக்டர் பிரியமுடன் லயனை டச் பண்ணாமல் போக முடியாது. ஏனென்றால், அதற்கான லாஜிக் பாயிண்ட் எல்லாமே அதில் இருக்கும். வாலி படத்தில்கூட அஜித் கடைசியாக சொல்லுவார் நீ பார்க்குறதுக்கு முன்னாடியே நான் அவளைப் பார்த்துட்டேன் என்று. பிரியமுடன் படத்தில் முதலில் விஜய் காதலித்த பொண்ணு அது. அவரோட நண்பன் கேரக்டர் ரத்தம் மட்டும் தான் கொடுத்திருப்பான், அப்போ விஜய் நண்பன் கிட்ட “மச்சா, உன்ன அவள் பார்க்கணும்னு நினைக்குறதுக்கு முன்னாடியே நான் அவளை லவ் பண்ணிட்டேன் டா, முதலில் என்னைப் பார்த்திருந்தால் அவள் என்னைத்தான் லவ் பண்ணியிருப்பாள்” என்றுச் சொல்லுவார். அவன் அதை ஒத்துக்கவே மாட்டான். இல்ல இல்ல, அவள் என்னைத்தான் லவ் பண்ணுறானு சொல்லுவான். விஜய் “கிடையாது டா, நான் லவ் பண்ணிட்டேன், உன்கிட்ட சொன்னதெல்லாம் அவளைப் பற்றிதான் டா, உனக்குத் தெரியும்ல நான் எவ்வளவு ஆழமாக லவ் பண்ணுறன்னு” என்றுச் சொல்லிப்பார்ப்பார். ஒரு கட்டத்தில் அவனை அடிச்சுடுவார், அவன் பள்ளத்தாக்கின் கீழே விழப்போவான், விஜய் அவனின் கையைப்புடிச்சு காப்பாற்ற முயற்ச்சிச் செய்வார். அவன் கீழே தொங்கிக்கிட்டு இருப்பான், விஜய் கையின் நுனியில் பிடித்திருப்பார், அப்போது விஜய் கேட்ப்பார் “மச்சா, இப்பயாவது எனக்காக விட்டுக்கொடுத்துடுடா, எனக்கு அந்த பொண்ணு வேணும் டா, நீயும் எனக்கு வேணும்னு சொல்லுவார். அவன் உயிரே போனாலும் நான் உண்மையை சொல்வேன் அப்டினு சொல்லிட்டெ இருக்கும்போது அந்தப் பொண்ணு விஜயைக் கூப்பிட்டுக்கிட்டே பக்கத்தில் வந்துடுவாங்க. விஜய் திரும்பிப் பார்த்துட்டு நண்பனோட கையை விட்டுட்டு சிரிப்பார். காதலுக்காக எதையும் செய்ய துணிஞ்ச ஒரு கேரக்டர், நண்பன் என்றுக்கூட பார்க்காமல் கையை விட்டுட்டு அப்புறம் வீட்டுக்குப் போய் அழுவார். விஜய் அனுபவிச்சு அந்த சீனில் நடித்திருந்தார். முன்னோட்டம் பார்க்கும்போது விஜய் எழுந்து வெளியே போயிட்டார். இந்த சீனை ஏன் தூக்கிட்டீங்கனு கோபப்பட்டார். படத்தைப் பார்த்துட்டு அஜித் என்னைக் கூப்பிட்டு “இந்த கேரக்டரை நான் பண்ணியிருக்கணும் செல்வா”னு சொன்னார். அவரும் அந்த கேரக்டரில் இன்வால்வ் அகிட்டார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT