Skip to main content

உச்ச நீதிமன்ற நிபந்தனைகள்! பட்டாசுத் தொழிலாளர்கள் பெருந்திரள் போராட்டம்! -விருதுநகர் மாவட்டம் திக்திக்!

Published on 21/12/2018 | Edited on 21/12/2018
aj

 

பட்டாசுத் தொழில் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக, பெருந்திரள் மனு கொடுக்கும் போராட்டத்தை அறிவித்திருக்கின்றனர். தமிழக முதல்வருக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வழியாக மனு கொடுக்கவிருக்கிறது பட்டாசுத் தொழில் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பு குழு. இன்று (21-12-2018) நடக்கவிருக்கும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, முழு கடை அடைப்பு செய்கிறது சிவகாசி வர்த்தகர்கள் சங்கம். 

 


‘பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்ட விதியை மாற்றி, புதிய விதியை ஏற்படுத்தும் அதிகாரம், அரசியல் சாசனத்தில் நீதிமன்றத்திற்கு கொடுக்கப்படவில்லை.’ என்பதைச் சுட்டிக்காட்டி, ‘பசுமைப் பட்டாசுகள் அல்லது குறைவான மாசு ஏற்படுத்தும் பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட வேண்டும்; விற்பனை செய்யப்பட வேண்டும்.’ என்ற உத்தரவானது, ஒட்டுமொத்த பட்டாசுத் தொழிலையும் முடக்கிப்போட்டு, சிவகாசியில் அனைத்துப் பட்டாசு ஆலைகளையும் மூட வைத்துவிட்டது. தமிழக அரசு,  பட்டாசுக்குத் தனிப்பட்ட விலக்களிப்பதற்கு மத்திய அரசினை வலியுறுத்தித் தீர்வு காண வேண்டும். அதற்கான வரைவினை தமிழக சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்பதே போராட்டக் குழுவின் கோரிக்கையாக உள்ளது. 
‘தமிழ்நாட்டில் உள்ள சிவகாசிதானே! பட்டாசுத் தொழிலாளர்கள்தானே! எக்கேடுகெட்டால் எங்களுக்கென்ன?’ என்ற மத்திய பா.ஜ.க. அரசின் அலட்சியமே, 8 லட்சம் பட்டாசுத் தொழிலாளர் குடும்பங்களை வீதிக்குக் கொண்டு வந்துவிட்டது. பசுமைப் பட்டாசு என்ற பதத்திற்கு எவருக்கும் பொருள் தெரியவில்லை. சட்ட விதிகளிலும் இல்லை. அரசுக்கும் அதிகாரிகளுக்கும் விளங்கவில்லை. சரியான புரிதலின்றி வழங்கப்பட்ட ஆணை மற்றும் நிபந்தனைகளால், ஒட்டுமொத்த பட்டாசுத் தொழிலும் நிலைகுலைந்து போயுள்ளது என்ற வேதனையே பெருந்திரள் போராட்டம் நடத்துவதற்குக் காரணமாக இருக்கிறது. 

 

v

 

‘பட்டாசுத் தொழிலாளர்களின் வலியை, தமிழகத்துக்கு மட்டுமல்ல.. இந்தியாவுக்கே உணர்த்த வேண்டும். தேசமே திரும்பிப் பார்க்க வேண்டும்.’ என்று முடிவெடுத்து, நாளை விருதுநகரில் பெருந்திரளாகக் கூடி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்துக்கு நடந்தே சென்று மனு கொடுக்கின்றனர். குறைந்தது ஒரு லட்சம் பேராவது இந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று குழுவினர் போரட்டத்துக்கான ஆயத்தங்களில் ஈடுபட, விருதுநகர் மாவட்ட நிர்வாகத்துக்கும், காவல்துறைக்கும் பதற்றம் தொற்றிக்கொண்டது. போராட்டம் குறித்த போஸ்டர்களும், மீம்ஸ்களும் மக்கள் கண்ணில்பட,  தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டமும் துப்பாக்கிச்சூடும் உயிரிழப்புக்களும் நினைவுக்கு வந்து பீதியடைய வைத்திருக்கிறது.  

 

 திடீரென்று மக்கள் உணர்ச்சிவசப்பட்டாலோ, சாலை மறியல் செய்தாலோ, ஏதும் அசம்பாவிதம் நடந்துவிடக்கூடும் என்று கருதி, கூட்டத்தைக் குறைப்பதற்கான ஆலோசனையை போராட்டக்குழுவினரிடம் தெரிவித்திருக்கிறது. அக்குழுவினரோ, கூட்டம் அதிகரிக்க வேண்டுமே தவிர, குறையக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து, ஏற்பாடுகளைக் கவனித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம்,  ‘என்னிடம் மனு கொடுப்பதற்கு எதற்காக சிவகாசியிலிருந்து விருதுநகர் வரவேண்டும்? நானே சிவகாசி வந்து வாங்கிக்கொள்கிறேன்.’ என்று கூறியும், போராட்டக்குழுவினர் கேட்பதாக இல்லை. 
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1070 பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் மொத்தத் தொழிலாளர்களும் சாலைக்கு வந்து போராடவிருப்பதால், திக்திக் மனநிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துவருகிறது விருதுநகர் மாவட்ட நிர்வாகம்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

ரஜினி, கமல், அஜித், விக்ரம், சூர்யா, செய்ததை விஜய் இன்னும் செய்யவில்லை..! என்னவா இருக்கும்?

Published on 03/09/2019 | Edited on 03/09/2019

தமிழ் சினிமாவில் சில காலங்களாக ட்ரெண்டில் இருந்துவந்த மதுரை சம்பந்தப்பட்ட படங்கள், முழு நீல காமெடி படங்கள், பேய் படங்கள், ஆகியவை மெல்ல மறைந்து தற்போது பார்ட் 2 காலம் ட்ரெண்ட்டில் இருந்து வருகிறது. இதில் பெரும்பாலும் வெற்றிபெற்ற படங்களின் இரண்டாம் பாகம் படங்கள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றன.

 

vijay

 

இந்த 2ஆம் பாக படங்கள் எங்கு ஆரம்பித்தது என்று பார்த்தால் அதிசய மனிதன், நாளைய மனிதன், குரோதம் மற்றும் நான் அவன் இல்லை படங்கள் மூலமாக இருந்தாலும் இது தீவிரம் அடைந்து ட்ரெண்டாக மாறியது என்னவோ 2011ல் வெளியான 'முனி 2 காஞ்சனா' படம் மூலம் தான். இந்த படம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றதையடுத்து இந்த பார்ட் 2 படங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்தன. 

 

அதன்பின் வரிசையாக காஞ்சனா 2, காஞ்சனா 3, பாகுபலி 2, கோ 2, வெண்ணிலா கபடி குழு 2, சண்டக்கோழி 2, கலகலப்பு 2, அரண்மனை 2,  கோலி சோடா 2, விஐபி 2, மாரி 2, ஜெய்ஹிந்த் 2, புலன் விசாரணை 2, பசங்க 2, டார்லிங் 2, ஜித்தன் 2, தில்லுக்கு துட்டு 2, தேவி 2, சென்னை 28 - 2, மணல் கயிறு 2, சென்னையில் ஒரு நாள் 2, திருட்டு பயலே 2, தமிழ்ப்படம் 2, சார்லி சாப்ளின் 2, சித்திரம் பேசுதடி 2, உறியடி 2, நீயா 2, களவாணி 2, கழுகு 2, ஆகிய படங்கள் தமிழ் சினிமாவில் படையெடுத்து, பலப்படங்கள் வெற்றிபெற்று சில படங்கள் கவனிக்கவும் வைத்தன. 

 

 

இதுபோக தமிழின் சூப்பர்ஸ்டார் நடிகர்களான ரஜினிக்கு 2.0, கமலுக்கு விஸ்வரூபம் 2, இந்தியன் 2, அஜித்திற்கு பில்லா 2, விக்ரமிற்கு சாமி 2, சூர்யாவுக்கு சிங்கம் 1,2,3 படங்கள் என பெரிய ஹீரோக்களும் தங்கள் பங்கிற்கு சீக்குவல் படங்களான பார்ட் 2 படங்களில் நடித்துள்ளனர். இதில் கவனிக்கத்தக்க ஒரு அம்சமாக விஜய் மட்டும் இன்னும் எந்த பார்ட் 2 படத்திலும் நடிகைவில்லை. விஜய் தொடர்ந்து ஒரு பாக படத்திற்கே முன்னுரிமை கொடுத்து நடித்து வருகிறார்.  

 

மேலும் முன்னணி நடிகர்களான தனுஷ், விஷால், ஜெயம் ரவி, மற்றும் இன்னும் சில நடிகர்களும் பார்ட் 2 படங்களில் நடித்து, அந்த படங்களும் வெளியாகியுள்ளன. மேலும் இவர்கள் நடிப்பில் 'சாட்டை 2 அடுத்த சாட்டை', 'தனி ஒருவன் 2', சதுரங்கவேட்டை 2, துப்பறிவாளன் 2, அப்பா 2, இரும்புத்திரை 2, நேற்று இன்று நாளை 2, கடவுள் 2, கும்கி 2, நாடோடிகள் 2, ராஜதந்திரம் 2, வடசென்னை 2, ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவர காத்திருக்கின்றன. மேலும் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றிபெற்ற படங்களின் பார்ட் 2க்கள் தயாரிக்க திரையுலகினர் திட்டமிட்டு வருகின்றனர். 

 

 

Next Story

விஜய் நடித்த கேரக்டருக்கு அஜித் ஆசைப்பட்டார்! - இயக்குனர் விண்செண்ட் செல்வா பகிர்ந்த சுவாரசிய நினைவுகள்

Published on 22/04/2019 | Edited on 22/04/2019

பிரியமுடன், யூத் போன்ற விஜய்யின் வெற்றிப்படங்களை இயக்கியவர் இயக்குனர் விண்செண்ட் செல்வா. அவர் தனது முதல் படத்திலேயே விஜயுடன் இணைந்த சுவாரசியமான சம்பவங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார். 
 

 

Director Vincent Selva about vijay with ajith

 

நான் ஃபிலிம் இன்ஸ்ட்யூட்டில் படிக்கும்போது ஒரு ஷாட் ஃபிலிம் எடுத்தேன்.  ‘மண்ணில் இந்த காதல்’னு தலைப்பு வச்சுருந்த அந்த ஷாட் ஃபிலிமுக்காக கே.பாலச்சந்தர் கையால் எனக்கு கோல்டு மெடல் கிடைச்சுது. அந்த காலகட்டத்தில் என் ஷாட் ஃபிலிமை நிறைய பெரிய ஆட்கள் பார்த்துப் பாராட்டினார்கள். அப்படித்தான் அந்த ஷாட் ஃபிலிமை விஜயிடமும் காட்டினேன். அவருக்கும் ரொம்போ பிடித்திருந்தது. தோடர்ந்து அவருடைய நண்பர் வீட்டுக்குக் கதைச் சொல்ல கூப்பிட்டார். நான் அவரிடம் “எனக்கு பெருசா கதைச் சொல்ல தெரியாது. இன்டெர்வெல் வரைக்கும் சொல்வேன், அது பிடித்திருந்தால் கண்டிப்பாக எனக்குப் படவாய்ப்புக் கொடுக்கணும்” அப்படின்னு ஒரு கண்டிஷன் போட்டேன். விஜய் சிரிச்சுக்கிட்டெ “சொல்லுங்கண்ணா, சொல்லுங்க”னு சொன்னார். 
 

ஒரு ஐந்து நிமிடக்கதையைச் சொல்லிவிட்டு நிறுத்திட்டேன். அவர் மேல சொல்லுங்கண்ணா என்றார். இதுக்கு மேல கதைச் சொன்னால் கண்டிப்பா வாய்ப்புக் கொடுக்கணும் சார்னு சொல்லும்போதே சொல்லுங்கண்ணா பார்க்கலாம்னு சொன்னார். நானும் முழுக் கதையைச் சொல்லி முடிச்சுட்டேன். அதுதான் ‘பிரியமுடன்’. அந்தக்கதையில் இரண்டு கேரக்டர், ஒன்று பாசிட்டிவ், இன்னொன்று நெகட்டிவ். அதிலும் பொசசிவின் எக்ஸ்ட்ரீமான கேரக்டர். தமிழ் சினிமாவில் அந்த மாதிரி பண்ணனும்னு நிறைய ஹீரோக்களுக்கு ஆசையிருந்தது. ஆனால், யார் பூனைக்கு மணிக்கட்டுறது. ஏனென்றால், ஹீரோ இமேஜ் போயிடுமோ என்று பயப்புடுவாங்க. ஆனால், விஜய் என்னுடைய இமேஜயே நீங்கள் பார்க்காதீங்கன்னு சொல்கிறார், எஸ்.ஏ.சி சார் வேண்டாம் என்று சைகை காட்டுகிறார். எனக்கும் மனதிற்குள் ஒரு பயம் இருந்தது, விஜய்க்கு பெண் ரசிகர்கள் அதிகம் இருந்தார்கள், ஏதாவது பிரச்சனை வருமோ என்று நினைச்சுக்கிட்டேன். அதனால், விஜய் நீங்க பாசிட்டிவ் கேரக்டர் பண்றீங்களான்னு கேட்டேன். நீங்கள் என்ன நினைக்குறீங்கன்னு அவர் என்னிடம் திருப்பிக் கேட்டார். 
 

இது வேறமாதிரி கேரக்டர்ன்னு சொன்னென். விஜய்யும் அந்தக் கேரக்டர் மேல் மிக அதிகமான நம்பிக்கை வச்சுருந்தார். 7 படம் நடித்த பிறகுதான் இந்தப் படத்தில் அவர் நடிக்க முடியும். அப்படியிருந்தும் பிரியமுடன் நடித்தாகணும்னு உறுதியாக இருந்தார். எந்த புரடக்‌ஷனும் ஒத்துக்கவில்லை. விஜய் “யார் இந்தப் படத்தை எடுக்கிறார்களோ அவர்களுக்குகாக நான் இன்னோரு படம் நடிக்கிறேன்” என்றுகூட சொன்னார். அப்போ விஜயை வைத்து எஸ்.ஏ.சி சார் ஒரு படம் டிரைக்ட் பண்ணுறதா பூஜையெல்லாம் போட்டு ரெடியாக இருந்துச்சு. அவரிடம் விஜய் “நான் யார் கிட்ட கெஞ்சுறது? நீங்கதான் எனக்கு விட்டுக்கொடுக்கணும்”னு கேட்டு எஸ்.ஏ.சி சாரின் படத்தை தள்ளிப் போட்டுவிட்டு ‘பிரியமுடன்’படத்தில் நடித்தார். விஜய் “கண்டிப்பா நெகட்டிவ் கேரக்டரில் தான் நடிக்கப்போறேன், இதில் சமரசமே பண்ணாதீங்க”அப்படினு சொல்லியிருந்தார். 
 

கிளைமேக்ஸில் விஜய் சாகணும், விஜய்யின் அப்பா அதற்கு ஒத்துக்கலை. ஒரு நல்ல ரசிகர்கள் இருக்காங்க அப்படினு தயங்கினார். விஜய் தான் என் கெரியரில் இப்படி ஒரு கேரக்டரில் கண்டிப்பா நடிக்கணும்னு சொல்லி அவரை சமாதானப்படுத்தினார். ஒரு முக்கியமான சீன் இருக்கு, ஆனால் அது படத்தில் வரலை. எந்த படத்தை எடுத்துக்கொண்டாலும் நெகட்டிவ் கேரக்டர் பிரியமுடன் லயனை டச் பண்ணாமல் போக முடியாது. ஏனென்றால், அதற்கான லாஜிக் பாயிண்ட் எல்லாமே அதில் இருக்கும். வாலி படத்தில்கூட அஜித் கடைசியாக சொல்லுவார் நீ பார்க்குறதுக்கு முன்னாடியே நான் அவளைப் பார்த்துட்டேன் என்று. பிரியமுடன் படத்தில் முதலில் விஜய் காதலித்த பொண்ணு அது. அவரோட நண்பன் கேரக்டர் ரத்தம் மட்டும் தான் கொடுத்திருப்பான், அப்போ விஜய்  நண்பன் கிட்ட “மச்சா, உன்ன அவள் பார்க்கணும்னு நினைக்குறதுக்கு முன்னாடியே நான் அவளை லவ் பண்ணிட்டேன் டா, முதலில் என்னைப் பார்த்திருந்தால் அவள் என்னைத்தான் லவ் பண்ணியிருப்பாள்” என்றுச் சொல்லுவார். அவன் அதை ஒத்துக்கவே மாட்டான். இல்ல இல்ல, அவள் என்னைத்தான் லவ் பண்ணுறானு சொல்லுவான். விஜய் “கிடையாது டா, நான் லவ் பண்ணிட்டேன், உன்கிட்ட சொன்னதெல்லாம் அவளைப் பற்றிதான் டா, உனக்குத் தெரியும்ல நான் எவ்வளவு ஆழமாக லவ் பண்ணுறன்னு” என்றுச் சொல்லிப்பார்ப்பார். ஒரு கட்டத்தில் அவனை அடிச்சுடுவார், அவன் பள்ளத்தாக்கின் கீழே விழப்போவான், விஜய் அவனின் கையைப்புடிச்சு காப்பாற்ற முயற்ச்சிச் செய்வார். அவன் கீழே தொங்கிக்கிட்டு இருப்பான், விஜய் கையின் நுனியில் பிடித்திருப்பார், அப்போது விஜய் கேட்ப்பார் “மச்சா, இப்பயாவது எனக்காக விட்டுக்கொடுத்துடுடா, எனக்கு அந்த பொண்ணு வேணும் டா, நீயும் எனக்கு வேணும்னு சொல்லுவார். அவன் உயிரே போனாலும் நான் உண்மையை சொல்வேன் அப்டினு சொல்லிட்டெ இருக்கும்போது அந்தப் பொண்ணு விஜயைக் கூப்பிட்டுக்கிட்டே பக்கத்தில் வந்துடுவாங்க. விஜய் திரும்பிப் பார்த்துட்டு நண்பனோட கையை விட்டுட்டு சிரிப்பார். காதலுக்காக எதையும் செய்ய துணிஞ்ச ஒரு கேரக்டர், நண்பன் என்றுக்கூட பார்க்காமல் கையை விட்டுட்டு அப்புறம் வீட்டுக்குப் போய் அழுவார். விஜய் அனுபவிச்சு அந்த சீனில் நடித்திருந்தார். முன்னோட்டம் பார்க்கும்போது விஜய் எழுந்து வெளியே போயிட்டார். இந்த சீனை ஏன் தூக்கிட்டீங்கனு கோபப்பட்டார். படத்தைப் பார்த்துட்டு அஜித் என்னைக் கூப்பிட்டு “இந்த கேரக்டரை நான் பண்ணியிருக்கணும் செல்வா”னு சொன்னார். அவரும் அந்த கேரக்டரில் இன்வால்வ் அகிட்டார்.