ADVERTISEMENT

விஜய் படத்தில் இணையும் விக்ரம் பட பிரபலம்

04:09 PM Jul 02, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'தளபதி 66' படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ள இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த கூட்டணி மீண்டும் தளபதி 67 படத்தில் இணைய உள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தளபதி 67 படத்தில் மேயாத மான் படத்தின் இயக்குநர் ரத்னகுமார் திரைக்கதை எழுத்தாளராக இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே லோகேஷ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் மற்றும் விக்ரம் படத்திற்கு ரத்னகுமார் திரைக்கதை எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT