thalapathy 67 new update out now

விஜய், பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ள இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர்தில்ராஜு தயாரிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தமன்இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இதையடுத்து 'தளபதி 67' படத்தைலோகேஷ்கனகராஜ் இயக்கவுள்ளார். விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியானமாஸ்டர்திரைப்படம் பெரும்வரவேற்பைபெற்ற நிலையில்இந்த கூட்டணி மீண்டும் 'தளபதி 67' படத்தில் இணைய உள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்கான பணிகளில்லோகேஷ் கனகராஜ் தனது குழுவுடன் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்.

Advertisment

இந்நிலையில் 'தளபதி 67' படத்தில் மலையாள படத்தில் நடித்தநாய் ஒன்று விஜய்யுடன்நடிக்கவுள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். அந்த நாயின் உரிமையாளர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், 'தளபதி 67' படத்தில் தனது நாய் நடிக்க அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், டிசம்பர் மாதத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும்எனவும் தெரிவித்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.