/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/20_70.jpg)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும்படம் 'லியோ'. இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
முதற்கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி முடித்த படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் படமாக்கி வருகிறார்கள்.இப்படத்தில்வசனம் எழுதுபவர்களில்ஒருவரானஇயக்குநர் ரத்னா குமார், காஷ்மீரின் படப்பிடிப்பின்போது விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி அணிந்திருந்த கண்ணாடி போல் கையில் வைத்து ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இப்படம் லோகேஷ் சினிமேட்டிக் யூனிவர்ஸ் பாணியில் உருவாவதாகவும் விஜய் சேதுபதி நடித்து வருவதாகவும் நம்பி வந்தனர்.
இந்த நிலையில் இந்த தகவல் குறித்து விஜய் சேதுபதி விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், "நான் நடிக்கவில்லை. அப்படி ஒரு சம்பவமும் கிடையாது. வதந்திகளை நம்பாதீங்க. ரத்னா குமார் ஏன் அப்படி செய்தார் என்று தெரியவில்லை. அதை ஜாலியாகத் தான் பண்ணியிருப்பார். நிறைய பேர் நிறைய விஷயங்களை யோசிச்சு போடுவாங்க. எல்லாத்துக்கும் எங்களால் பதில் சொல்ல முடியாது" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)