ADVERTISEMENT

சிவகார்த்திகேயனுடன் இணைந்த மிஷ்கின் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

06:19 PM Aug 03, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

'டான்' படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் 'ப்ரின்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோஷாப்கா நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்து வருகிறார். இப்படத்தை 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்' நிறுவனத்துடன் இணைந்து 'சுரேஷ் புரொடக்ஷன்' நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

இதையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக 'மண்டேலா' படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கும் ’மாவீரன்’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் இயக்குநர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT