ADVERTISEMENT

”இது நடந்துறாதானு ஏங்கிருக்கேன்; இத்தனை வருஷம் ஏன் நடக்கலனு இப்பதான் புரியுது” - இயக்குநர் முத்தையா நெகிழ்ச்சி

06:39 PM Aug 03, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதீதி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் இன்று நடைபெறுகிறது. அந்த நிகழ்வுக்கு முன்னதாக இயக்குநர் முத்தையா பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அந்தச் சந்திப்பில் அவர் பேசியதாவது, “குட்டிப்புலி, கொம்பன் உள்ளிட்ட என்னுடைய படங்களின் வரிசையில் இந்தப் படமும் பண்பாடு மாறாத மண்ணுடைய மரபை பேசக்கூடிய படமாக இருக்கும். இந்தப் படத்திலும் உறவின் முக்கியத்துவத்தை சொல்லியிருக்கிறேன். இது கார்த்தி சாருடன் எனக்கு இரண்டாவது படம். எனக்கு ஆறு படங்களாக ஆடியோ லான்ச் நடக்கவில்லை. ஒவ்வொரு படத்தின்போதும் தள்ளி தள்ளிப்போனது . ஆடியோ லான்ச் நடந்தால் அம்மா, அப்பாவை அழைத்துவந்து மேடையேற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்காக ஒவ்வொரு படத்தின்போதும் ஏங்கியிருக்கேன். அது நான் பிறந்து வளர்ந்த மண்ணில் நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை முறை தள்ளி தள்ளி போனது என நினைக்கிறேன்.

படத்தில் பெரிய நடிகர்கள் நிறைய பேர் நடித்துள்ளனர். பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு படத்தோட ரிசல்ட்டை தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் மதுரையில் கேளுங்கள் என்பார்கள். அப்படிப்பட்ட மதுரையில் வந்து ஆடியோ லான்சை நடத்துவது ரொம்பவும் சந்தோசமாக இருக்கிறது”. இவ்வாறு இயக்குநர் முத்தையா தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT