Published on 30/12/2020 | Edited on 30/12/2020

'குட்டிப்புலி' படத்தின் மூலம், தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் இயக்குனர் முத்தையா. அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'தேவராட்டம்'. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படத்தைத் தொடர்ந்து, இயக்குனர் முத்தையா இயக்கும் அடுத்த படத்திற்கு 'புலிக்குத்தி பாண்டி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இப்படம் பொங்கல் தினத்தன்று சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. அதனைத் தொடர்ந்து, இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் முத்தையா, இப்படத்தின் படப்பிடிப்பை மதுரை சுற்று வட்டாரப்பகுதியில் ஒரே கட்டமாக நடத்தி முடித்துவிட்டதாகக் கூறுகின்றனர் சினிமா வட்டாரங்கள்.