ADVERTISEMENT

"இது ரொம்ப கஷ்டம் ப்ரோ" - ரசிகரின் கேள்விக்கு ஓப்பனாக பதிலளித்த லோகேஷ்

04:20 PM Jun 11, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விக்ரம்'. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

இதையடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களின் பல கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர், "நீங்கள் முழு காதல் திரைப்படம் பண்ணுவிங்களா" எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரொம்ப கஷ்டம் எனப் பதிலளித்துள்ளார்.

இப்படம் வெளியாகிய 7 நாளில் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படம் மட்டுமே இந்த சாதனையைப் படைத்திருந்த நிலையில் தற்போது கமலின் விக்ரம் படம் அதை முறியடித்துள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT