Lokesh Kanagaraj thanks Kamal Haasan his birthday wishes

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான 'மாநகரம்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய லோகேஷ் கனகராஜ், 'கைதி', 'மாஸ்டர்' ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார்.

Advertisment

கமலின் படங்களைபார்த்துதான்தனக்கு சினிமா இயக்குவதில் ஆர்வம் வந்ததாகவும், சினிமாவில்தனக்கு குருநாதர் அவர்தான் எனவும்லோகேஷ் கனகராஜ் நிறைய மேடைகளில் கூறியிருக்கிறார். அந்த வகையில்கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலைவைத்து 'விக்ரம்' படத்தை இயக்கி வருகிறார்.லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (14.3.2022) 'விக்ரம்' படம் ஜூன் 3ஆம்தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனது36ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடும் லோகேஷ் கனகராஜுக்குதிரைப்பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்து கூறிவருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் நடிகர் கமல் லோகேஷ் கனகராஜிக்குவாழ்த்து தெரிவித்து வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,"ரசிகராகத் தொடங்கி இயக்குநராக வளர்ந்து இன்று சகோதரராக மாறியிருக்கும் லோகேஷ் கனகராஜிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள லோகேஷ் கனகராஜ், "இதை விட சிறந்த பிறவிப்பலன் வேறொன்றும் இல்லை. நன்றி ஆண்டவரே" எனத்தெரிவித்துள்ளார்.