/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/523_3.jpg)
‘மாஸ்டர்’ படத்தின்வெற்றியைத்தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கியுள்ளார். இதில் விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில்,அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில்வெளியாக உள்ளது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ட்ரைலர் மற்றும் இசை வரும் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள படத்தின் முதல் பாடலானபத்தல பத்தல பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளது.
இந்நிலையில் விக்ரம் படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி 'விக்ரம்' படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 15 ஆம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள விக்ரம் பட இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவும் கலந்து கொள்வார்என சினிமா வட்டரங்கள்தெரிவித்துள்ளன. 'விஸ்வரூபம் 2' படத்திற்கு பிறகு 4 ஆண்டுகள் கழித்து கமல் நடிப்பில் 'விக்ரம்' படம் வெளியாகவுள்ளதாலும், இதில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்துள்ளதாலும்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)