ADVERTISEMENT

விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' - ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்ட புது அப்டேட்

11:52 AM Feb 25, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் 'துருவ நட்சத்திரம்'. இப்படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். கெளதம் மேனன் நிறுவனம் மற்றும் இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். முன்னதாக இப்படத்தின் முதல் பாடல் 'ஒரு மனம்' மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு முடிந்த நிலையில் சில பிரச்சனைகள் காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகியும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் இப்படத்தின் மீதம் உள்ள படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக படக்குழு அண்மையில் ஒரு போஸ்டரை வெளியிட்டு உறுதிப்படுத்தியது.

இந்த நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தின் பின்னணி இசை கோர்க்கும் பணிகளைத் தொடங்கியதாகவும் விரைவில் திரையரங்குகளில் படம் வெளியாகும் என்றும் இப்படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்துள்ளார். இதனால் இப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பா.ரஞ்சித் இயக்கும் 'தங்கலான்' படத்திலும் விக்ரம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இயக்குநர் கெளதம் மேனன் சமீப காலமாக நடிப்பிலும் கவனம் செலுத்தி வருவதால் விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். மேலும், இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT