/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/50_50.jpg)
கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் 'துருவ நட்சத்திரம்'. இப்படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கெளதம் மேனன் நிறுவனம் மற்றும் இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு முடிந்த நிலையில், சில பிரச்சனைகள் காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகியும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. பின்பு அனைத்து பிரச்சனைகளும் முடிந்து படத்தின் அப்டேட் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்தது.
ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகிய நிலையில், படத்தின் இரண்டாவது பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. பின்பு வருகிற நவம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகத்தெரிவித்து ஒரு சின்னட்ரைலரை படக்குழு வெளியிட்டது. சமீபத்தில் இப்படத்தின் புதிய ட்ரைலரை விஜய்யின் லியோ பட திரையரங்குகளில் பிரத்யேகமாகத்திரையிடப்பட்டு வந்தது. இதையடுத்துயூட்யூபில் அந்த புதிய ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
ட்ரைலரைபார்க்கையில், மும்பையில் 2008 ஆம் ஆண்டு நடந்த ஒரு ஹோட்டல் தாக்குதலில், பல சர்ச்சைகள் நிலவுகிறது. அதை சரி செய்ய 10 பேர் கொண்டஒரு ரகசிய டீம் உருவாகிறது. அதில் 11வது ஆளாக விக்ரம் வருகிறார். அந்த டீம் நினைத்ததை சரி செய்ததா இல்லையா என்பதை ஆக்ஷன் கலந்த த்ரில்லருடன் படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. இந்த படத்திற்கு நீண்ட காலமாகவே எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இந்த ட்ரைலருக்கு பிறகு அந்த எதிர்பார்ப்புரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் ட்ரைலரில் கிரிக்கெட் டச் ஆங்காங்கே அமைந்துள்ளது. படம் முழுக்க அது தொடர்வதை உணர முடிகிறது. அதன் தொடர்பாக வரும் பல வசனங்களில் ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’என்றுவிக்ரம் பேசும் வசனம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)