Skip to main content

“நிறைய கற்றுக்கொண்டேன்...” - அனுபவம் பகிர்ந்த கௌதம் மேனன்

Published on 25/10/2023 | Edited on 25/10/2023

 

gautham menon shared his life experience about after dhruva natchathiram start

 

கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் 'துருவ நட்சத்திரம்'. இப்படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கெளதம் மேனன் நிறுவனம் மற்றும் இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு முடிந்த நிலையில், சில பிரச்சனைகள் காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகியும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. பின்பு அனைத்து பிரச்சனைகளும் முடிந்து படத்தின் அப்டேட் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்தது. 

 

ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகிய நிலையில், படத்தின் இரண்டாவது பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. பின்பு வருகிற நவம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகத் தெரிவித்து ஒரு சின்ன ட்ரைலரை படக்குழு வெளியிட்டது. சமீபத்தில் இப்படத்தின் புதிய ட்ரைலரை விஜய்யின் லியோ பட திரையரங்குகளில் பிரத்யேகமாகத் திரையிடப்பட்டு வந்தது. இதையடுத்து யூட்யூபில் நேற்று வெளியாகியது. 


 
இந்த ட்ரைலருக்கு எக்ஸ் தளம் மூலம் வாழ்த்து தெரிவித்த திரைப் பிரபலங்களுக்கு நன்றி கூறி வருகிறார் கௌதம் மேனன். அந்த வகையில் பயனாளி ஒருவர், துருவ நட்சத்திரம் படம் ஆரம்பிக்கும் போது தான் கல்லூரி 2 ஆம் ஆண்டு படித்து வந்ததாகவும் இப்போது 3 வருட அனுபவத்துடன் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருவதாகவும் குறிப்பிட்டு வாழ்க்கை எப்படி மாறிவிட்டது என்று பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவிற்கு பதிலளித்த கௌதம் மேனன், "படம் ஆரம்பித்த பிறகு நிறைய கற்றுக்கொண்டேன். 3 படங்கள், 4 ஆந்தாலஜி குறும்படங்கள், 5 மியூசிக் வீடியோக்களை இயக்கி வெளியிட்டுள்ளேன். மேலும் 6வது அறிவை வளர்த்துக் கொண்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஹலிதா ஷமீம் உள்ளிட்டோர் ட்ரைலருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மம்மூட்டியை இயக்கும் கௌதம் மேனன் 

Published on 14/05/2024 | Edited on 14/05/2024
mammooty to act in gautham menon direction

இயக்குநர் கௌதம் மேனன் சமீப காலமாக நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே இயக்கத்திலும் கவனம் செலுத்தி வந்த அவர், கடைசியாக ‘ஜோஷ்வா இமை போல காக்க’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இவர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் சில காரணங்களால் இன்னும் வெளியாகவில்லை. 

இந்த நிலையில் கௌதம் மேனன் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் மம்மூட்டியை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகவும், கதாநாயகியாக நயன் தாரா நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் படம் இயக்கிய கௌதம் மேனன் இப்படம் மூலம் மலையளத்தில் அறிமுகமாகவுள்ளதாக மலையாள திரையுலகத்தில் பேசப்படுகிறது. 

மம்மூட்டி கடைசியாக பிரமயுகம் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த பிப்ரவரி 15 ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது டர்போ, பஸுக்கா உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பஸுக்கா படத்தில் கௌதம் மேனனும் நடித்துள்ளார். இந்த நிலையில் கௌதம் மேன்னன் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகும் பட்சத்தில் முதல் முறையாக அவர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இப்படம் மூலம் மீண்டும் நயன்தாராவோடு இணைந்து நடிக்கவுள்ளார். இதற்கு முன்பாக மூன்று படங்களில் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

பூஜையுடன் தொடங்கிய ‘பைசன்’ படப்பிடிப்பு (புகைப்படங்கள்)

Published on 06/05/2024 | Edited on 06/05/2024

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் ‘பைசன்’ என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகிறது. இப்படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இனைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். கபடி விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருவதாகவும் அறிவிக்கப்பட்ட நிலையில் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகுவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. போஜை விழாவில் படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினராக விக்ரமும் கலந்து கோண்டார். மேலும் கிளாப் போர்டு அடித்து படப்பிடிப்ப தொடங்கி வைத்தார்.