ADVERTISEMENT

'மிஷன் ஆன்' - டானாக விக்ரம்

12:05 PM Jul 19, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் 'துருவ நட்சத்திரம்'. இப்படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். கெளதம் மேனன் நிறுவனம் மற்றும் இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். முன்னதாக இப்படத்தின் முதல் பாடல் 'ஒரு மனம்' மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு முடிந்த நிலையில் சில பிரச்சனைகள் காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகியும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் இப்படத்தின் மீதம் உள்ள படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக படக்குழு அண்மையில் ஒரு போஸ்டரை வெளியிட்டிருந்தது. அண்மையில் படத்தின் பின்னணி இசை கோர்க்கும் பணிகள் தொடங்கியதாகவும் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்தார்.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ஜான் என்ற கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ள நிலையில் அதை விவரிக்கும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது. வழக்கம் போல கெளதம் மேனனின் ஹீரோ அறிமுக பாடல் எப்படி ஸ்டைலாக இருக்குமோ அதே போன்று இப்பாடலும் இருக்கிறதால் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. பாடலில் ஆங்கிலத்தில் வரும் 'ஹிஸ் நேம் இஸ் ஜான்... ஹீ இஸ் டான்' என்ற வரிகள் ரசிக்க வைக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT