Dhruva Natchathiram new Trailer update

Advertisment

கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் 'துருவ நட்சத்திரம்'. இப்படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கெளதம் மேனன் நிறுவனம் மற்றும் இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு முடிந்த நிலையில், சில பிரச்சனைகள் காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகியும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது.

இப்படம் குறித்து லிங்குசாமி, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு படங்களுக்கு பிறகு கௌதம் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியின் மேஜிக்கை திரையில் பார்க்க ஆவலாக இருப்பதாக அவரது எக்ஸ் பதிவில் தெரிவித்திருந்தார். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. மேலும் வருகிற நவம்பர் 24ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்தது. இதில் ஜான் என்ற பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார்.

இந்த நிலையில் படத்தின் புதிய ட்ரைலர் வருகிற 24ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்த ட்ரைலர் தற்போது பிரத்யேகமாக விஜய்யின் லியோ பட திரையிடலின் போது திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான புதிய போஸ்டர் ஒன்றைபடக்குழு பகிர்ந்துள்ளநிலையில் அது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.