dhruva natchathiram release date announced

கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் 'துருவ நட்சத்திரம்'. இப்படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கெளதம் மேனன் நிறுவனம் மற்றும் இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு முடிந்த நிலையில் சில பிரச்சனைகள் காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகியும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது.

Advertisment

சமீபத்தில் இப்படம் குறித்து லிங்குசாமி, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு படங்களுக்கு பிறகு கௌதம் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியின் மேஜிக்கை திரையில் பார்க்க ஆவலாக இருப்பதாக அவரது எக்ஸ் பதிவில் தெரிவித்திருந்தார். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற நவம்பர் 24ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட வருடங்களாக இழுபறியில் இருந்த இப்படம் தற்போது ரிலீஸாகவுள்ளதால்ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். இந்த ட்ரைலர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.