ADVERTISEMENT

அமெரிக்காவில் இருந்து டிப்டாப்பாக வந்து இறங்கிய தனுஷ்! வைரலாகும் போட்டோ!

01:46 PM Jul 01, 2021 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

'கர்ணன்', 'ஜகமே தந்திரம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள படம் 'டி43'. ‘துருவங்கள் பதினாறு’, ‘மாஃபியா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கவுள்ள இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார். மேலும் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் இப்படத்தினைத் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்தின் முன்தயாரிப்பு பணிகள் முடிந்து இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று (01.07.2021) ஆரம்பமாகியுள்ளது. ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்றிருந்த நடிகர் தனுஷ், 4 மாதங்கள் கழித்து அமெரிக்காவில் இருந்து நேரடியாக ஐதராபாத் வந்தடைந்தார். அங்கு அவர் 'டி 43’ படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார். இவர் ஐதராபாத் விமான நிலையத்தில் வந்தடைந்த புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT