Skip to main content

தனுஷ் படத்தின் படப்பிடிப்பு எப்போது..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Published on 26/06/2021 | Edited on 26/06/2021

 

gesgasdgdas

 

‘கர்ணன்’, ‘ஜகமே தந்திரம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள படம் 'டி43'. ‘துருவங்கள் பதினாறு’, ‘மாஃபியா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கவுள்ள இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார். மேலும் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

 

முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் இப்படத்தினைத் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் முன்தயாரிப்பு பணிகள் முடிந்து இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் தொடங்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்