ADVERTISEMENT

"தியேட்டர் தெறிக்கப் போகிறது" - மாமன்னன் குறித்து தனுஷ்

01:08 PM Jun 28, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வடிவேலு, ஃபகத் பாசில், ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பைப் பெற்றது. உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியாகவுள்ள இப்படம் யு/ஏ சான்றிதழுடன் நாளை (29.06.2023) வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தை தனுஷ் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மாரி செல்வராஜின் மாமன்னன் ஒரு எமோஷன் நிறைந்தது. அவருக்கு ஒரு பெரிய பாராட்டு. வடிவேலு மற்றும் உதயநிதி அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். ஃபகத் ஃபாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் நன்றாக நடித்துள்ளார்கள். இடைவெளி காட்சிக்கு தியேட்டர் தெறிக்கப் போகிறது. இறுதியாக ஏ.ஆர். ரஹ்மான் அழகாக இசையமைத்துள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து தனுஷ் பாராட்டுக்கு மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார். ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தனுஷின் இந்த பாராட்டு மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் ஒரு படம் பண்ண கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT