ADVERTISEMENT

நடிகர் தனுஷின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!

10:37 AM Aug 06, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்த கையோடு, மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகும் படத்தைத் தொடங்கியுள்ளார் நடிகர் தனுஷ். இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். மேலும் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இயக்குநர் மித்ரன் ஜவஹரின் முந்தைய படங்களான ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ போன்று இப்படமும் காதல் திரைப்படமாக உருவாகவுள்ளது.

'டி 44' எனத் தற்காலிகமாகப் பெயரிட்டு இப்படத்தின் படப்பிடிப்பை படக்குழு நேற்று (05.08.2021) தொடங்கிய நிலையில், படத்திற்கு 'திருச்சிற்றம்பலம்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT