சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் 'திருச்சிற்றம்பலம்'. மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இப்படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் 'திருச்சிற்றம்பலம்' படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் இசை விழா நாளை (29.07.2022) நடைபெறவுள்ளது. இதனை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம், தனுஷ் உள்ளிட்ட அனைவரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இது தொடர்பாக வீடியோவையும் பகிர்ந்துள்ளார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. தனுஷ், அனிருத் கூட்டணி ஆறு வருடங்களுக்குப் பிறகு இப்படத்தில் இணைந்துள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனிடையே செல்வராகவன் இயக்கும் 'நானே வருவேன்' படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ். தற்போது தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் 'வாத்தி' படத்தில் நடித்து வருகிறார்.
See you all Tom at Thiruchitrambalam audio launch #DnAhttps://t.co/5pHJ0xrGV1
— Dhanush (@dhanushkraja) July 29, 2022