ADVERTISEMENT

டி 50 - மீண்டும் களத்தில் இறங்கிய தனுஷ்

06:13 PM Jul 05, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தில் பிசியாக நடித்து வருகிறார் தனுஷ். 'சத்யஜோதி ஃபிலிம்ஸ்' தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையில் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படமும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

மேலும் தனது 50வது படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க தனுஷே இயக்கி நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.

இதுமட்டுமல்லாமல் மீண்டும் இந்தியில் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் 'தேரே இஷ்க் மெய்ன்' (Tere Ishk Mein) என்ற தலைப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. அண்மையில் தனது குடும்பத்துடன் திருப்பதி சென்ற தனுஷ் மொட்டை அடித்தார்.

இந்நிலையில் தனுஷின் 50வது படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி முன்பு வெளியான தகவல் போல இப்படத்தை அவரே எழுதி இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்துள்ளதாக ஒரு போஸ்டரை பகிர்ந்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். அதில் மொட்டை கெட்டப்புடன் தனுஷ் இருக்கிறார். தனுஷின் 50வது படம் என்பதாலும் அவரே இயக்கவுள்ளதாலும் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் மூலம் இரண்டாவது முறையாக இயக்குநராகக் களமிறங்கியுள்ளார் தனுஷ். முதல் படமான ப. பாண்டி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT