Skip to main content

"தனுஷ் கேட்டால் மறுப்பு தெரிவிக்கமாட்டேன்" - கங்கனா ரணாவத்

 

kangana about dhanush and d50 movie

 

அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தில் பிசியாக நடித்து வருகிறார் தனுஷ். 'சத்யஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

இதையடுத்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ளார் தனுஷ். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்க தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகவுள்ளதாக படக்குழு தெரிவித்தது. இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தை தனுஷின் 'வொண்டர்பார் ஃபில்ம்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. 

 

இதனிடையே தனது 50வது படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை தனுஷே இயக்கி நடிக்கவுள்ளார் எனவும் காளிதாஸ் ஜெயராம், விஷ்ணு விஷால் மற்றும் துஷாரா விஜயன் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யாவும், நடிகர் சந்தீப் கிஷனும் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து கதாநாயகியாக த்ரிஷா கமிட்டாகியுள்ளதாக பேசப்பட்டது. 

 

இந்நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தை இப்படத்தில் நடிக்க வைக்க தனுஷ் அழைப்பு விடுத்ததாகவும் நெகட்டிவ் கதாபாத்திரம் என்பதால் கங்கனா மறுத்துவிட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. ஆனால், அத்தகவல் பொய்யான செய்தி என்று தற்போது கங்கனா தெரிவித்துள்ளார். மேலும், "இப்படத்தில் நடிக்க யாரும் என்னை அணுகவில்லை. தனுஷ் எனக்கு பிடித்தமான நடிகர். அவர் கேட்டால் நான் மறுப்பு தெரிவிக்க மாட்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.