ADVERTISEMENT

"இப்போதைய தலைமுறை அப்படி ஆகிவிட்டது. ஆனால்..." - மாணவர்களுக்கு விக்ரம் நம்பிக்கை

07:33 PM Aug 23, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோப்ரா'. இப்படம் வருகிற 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் படக்குழு. மேலும் தமிழ்நாடு, கேரளா. கர்நாடகாவில் உள்ள சில முக்கியமான நகரங்களில் ரசிகர்களை சந்தித்து உரையாட திட்டமிட்டுள்ளனர். இந்த சுற்றுப் பயணம் இன்று (23.08.2022) முதல் தொடங்கி வருகிற 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அதன் ஒரு பகுதியாக திருச்சியில் தூய வளனார் (ST Joseph ) கல்லூரியில் மாணவர்களிடையே கலந்துரையாடினார்கள். அப்போது விக்ரம் பேசுகையில், "திருச்சி என்றாலே எனக்கு சாமி படம் தான் ஞாபகத்திற்கு வரும். பள்ளி பருவத்தில் திருச்சியில் விளையாட்டில் கலந்து கொள்ளவதற்காக வந்திருக்கிறேன். கோப்ரா திரைப் படம் ஒரு அறிவியல் சார்ந்து, எமோஷன் கலந்த ஒரு படம். கதாநாயகி ஸ்ரீநிதி செட்டி கல்லூரி மாணவியாக, ஆராய்ச்சியாளராக நடித்துள்ளார். என் அப்பா ஐ.ஏ.எஸ் படிக்க சொன்னார். நான் கல்லூரிக்கே செல்லவில்லை. எனது நாட்டம் முழுவதும் திரைத்துறையில் தான் இருந்தது.

சினிமா என்றால் எனக்கு பைத்தியம். தற்போது கூட கேவலமாக தாடியுடன் இருக்கேன். அது குறித்த கவலை எனக்கு இல்லை எனது எண்ணம் முழுவதும் சினிமாதான். என்னுடைய அடுத்த படத்திற்காக தாடி வளர்த்துக் கொண்டிருக்கிறேன். எனது ரசிகர்கள் சிலர் பச்சைக் குத்தி கொள்கிறார்கள். ஆனால் அவர்களை நான் சந்திக்க கூட முடியாது. இருப்பினும் என் மீது பாசத்துடன் உள்ளனர். இதெல்லாம் எனக்கு கடவுள் கொடுத்த வரம்." எனப் பேசினார்.

மேலும் நீங்கள் எவ்வளவோ சிரமங்களை கடந்து வந்துள்ளீர்கள். ஆனால், இப்போதுள்ள மாணவர்கள் சின்ன விஷயத்துக்கெல்லாம் கொலை செய்து கொள்கிறார்களே? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விக்ரம், "தற்போதைய தலைமுறை அப்படி ஆகிவிட்டது. உங்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ? அதை உறுதியாக செய்ய வேண்டும். விபத்துக்குள்ளான நான் நடக்கவே முடியாது என மருத்துவர்கள் கூறிய நிலையில் வைராக்கியத்துடன் நடந்து நடிக்க ஆரம்பித்தேன்" என சினிமா மீதான தனது காதலையும் தனது மன உறுதியையும் வெளிப்படுத்தினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT