cobra movie second song release Tomorrow

Advertisment

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோப்ரா'. இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இர்ஃபான் பதான், கே.எஸ். ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் நடிகர் விக்ரம் 7 கெட்டப்பில் நடித்துள்ளார். செவன் ஸ்கிரீன்ஸ் சார்பில், தயாரிப்பாளர் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே வெளியான 'கோப்ரா' படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும் முடித்துள்ள படக்குழு தற்போது இறுதிக் கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் இப்படம் குறித்த அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் விக்ரம் தனது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள நிலையில் ரசிகர்களுக்குப் பிறந்தநாள் விருந்தாக கோப்ரா படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. பார்ட்டி பாடல் போன்ற புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் விக்ரமின் பிறந்தநாள் பார்ட்டியை பாடலுடன் கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.

இருப்பினும் சிலர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு கோப்ரா படத்தின் ட்ரைலர் அல்லது ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் வெறும் பாடல் மட்டும் வெளியாகும் எனப் படக்குழுவினர் இந்த அறிவிப்பு அவர்களின் கணிப்பைப் பொய்யாக்கியுள்ளது.