Published on 25/08/2022 | Edited on 25/08/2022

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோப்ரா'. இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ' தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படம் வருகிற 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் படக்குழு தற்போது ட்ரைலரை வெளியிட்டுள்ளது. இதில் கணக்கு வாத்தியாராக வரும் விக்ரம், வில்லன்களை பல கெட்டப்பில் எதிர்கொள்வது போல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.