ADVERTISEMENT

'கே.ஜி.எஃப்' -ல் என்ட்ரி கொடுக்கும் விக்ரம்; பிரிட்டிஷ் காலகட்டத்தை படமாக்கும் ரஞ்சித்

11:06 AM Jul 16, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'கோப்ரா', மணிரத்னத்தின் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள விக்ரம் அடுத்தாக பா. ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். 'சியான் 61' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.இ ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். ஜி. வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் பணிகள் இன்று சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதில் விக்ரம், பா. ரஞ்சித், ஜி. பிரகாஷ். கே. இ ஞானவேல் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இப்படம் குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் கூறுகையில், 'சியான் 61' படம் 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் காலகட்டத்தில் 'கே.ஜி.எஃப்' - பில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ளது. இந்த படம் தத்ரூபமானதாகவும், ராவாகவும் இருக்கும். இதில் ஹீரோவின் கதாபாத்திரம் வலுவாக இருக்கும் என்பதால் விக்ரமை தேர்வு செய்துள்ளேன். கண்டிப்பாக அவரது சினிமா வாழ்க்கையில் இது முக்கியமான படமாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT