/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/527_2.jpg)
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'கோப்ரா', மணிரத்னத்தின் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள விக்ரம் அடுத்தாகபா. ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். 'சியான் 61' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தைஸ்டூடியோக்ரீன்நிறுவனம் சார்பில் கே.இஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இப்படம் குறித்தஅதிகாரப்பூர்வ அறிவிப்பு 5 மாதங்களுக்கு முன்பே வெளியானாலும், இயக்குநர் பா.ரஞ்சித் 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தில் கவனம் செலுத்தியதால்'சியான் 61' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல்இருந்தது.
இந்நிலையில் பா.ரஞ்சித் 'நட்சத்திரம்நகர்கிறது' படத்தின் பணிகள்முடியவுள்ளதால்வரும் ஜூலை மாதத்திலிருந்து 'சியான் 61' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு படக்குழு 'மைதானம்' என பெயர் வைத்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. 'மைதானம்' என்று தலைப்பு வைத்துள்ளதால்மீண்டும் ரஞ்சித் விளையாட்டு சம்பந்தப்பட்ட கதையை இயக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் யூகித்து வருகின்றனர். குத்து சண்டைவிளையாட்டைமையமாக வைத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'சார்பட்டாபரம்பரை' படம் பெரும் ஹிட்டடித்த நிலையில் தற்போது மீண்டும் விளையாட்டை பா.ரஞ்சித் கையில் எடுத்துள்ளதாகவெளியாகி உள்ள செய்தி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)