/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1266.jpg)
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'கோப்ரா', மணிரத்னத்தின் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள விக்ரம் அடுத்தாகபா. ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். 'சியான் 61' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தைஸ்டூடியோக்ரீன்நிறுவனம் சார்பில் கே.இஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இப்படம் குறித்தஅதிகாரப்பூர்வ அறிவிப்பு 5 மாதங்களுக்கு முன்பே வெளியானாலும், இயக்குநர் பா.ரஞ்சித் 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தில் கவனம் செலுத்தியதால்'சியான் 61' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் நட்சத்திரம்நகர்கிறது படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டு தயாராகியுள்ளதால், பா. ரஞ்சித் "சியான் 61" படத்தில் கவனம் செலுத்த உள்ளார்.சமீபத்தில் சியான்61 படத்தின் படப்பிடிப்பிற்காக படப்பிடிப்பு தளத்தை தேர்வு செய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாளில் சென்னையில் பூஜையுடன் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படப்பிடிப்பு பணிகளை முழுவீச்சில் முடித்து பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகசினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)