ADVERTISEMENT

'கோப்ரா' படம் தொடர்பான வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

05:20 PM Aug 29, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT


அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோப்ரா'. இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ' தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 31 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு தீவிரமான புரொமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. 3 மணிநேரம் 3 நிமிடம் 3 வினாடி ஓடக்கூடிய கோப்ரா படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்று வழங்கியுள்ளது.

இதனிடையே கோப்ரா படத்தை அரசு மற்றும் தனியார் இணையதளத்தின் மூலம் சட்ட விரோதமாக வெளியிட தடை விதிக்க வேண்டும் எனப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையில், நூற்றுக்கணக்கானோர் பல மாதங்கள் கடுமையாக உழைத்து பெரும் பொருட்செலவில் கோப்ரா படத்தை உருவாக்கி உள்ளனர். அப்படி இருக்கையில் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும் எனப் படக்குழுவினர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதி செந்தில்குமார் அமர்வு, கோப்ரா படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT