Udhayanithi acquired the Tamil Nadu Theatrical rights of vikram's 'cobra' movie

Advertisment

'மகான்' படத்தை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோப்ரா'. அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். இர்ஃபான் பதான், கே.எஸ். ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் நடிகர் விக்ரம் 7 கெட்டப்பில் நடித்துள்ளார். 'செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ' தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது ரிலீசுக்கான பணிகள் நடந்து கொண்டு வருகிறது.

இந்நிலையில் 'கோப்ரா' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன் படி இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை உதயநிதியின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக ரெட் ஜெயண்ட் நிறுவனம் தங்களது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. 'கோப்ரா' படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.