இயக்குநர்அஜய்ஞானமுத்துஇயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோப்ரா'. இப்படத்தில் கதாநாயகியாகஸ்ரீநிதிஷெட்டிநடித்துள்ளார்.இர்ஃபான்பதான், கே.எஸ். ரவிக்குமார்,ஜான்விஜய் ஆகியோர் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் நடிகர் விக்ரம் 7கெட்டப்பில்நடித்துள்ளார்.செவன்ஸ்கிரீன்ஸ்சார்பில், தயாரிப்பாளர்லலித்தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும் முடித்துள்ள படக்குழு தற்போது இறுதிக் கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில்கோப்ராபடத்தின்எக்ஸ்குளுசிவ்போஸ்டரைபடக்குழு வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்றாண்டுகளாக நடைபெற்று வந்த இப்படத்தின் பணிகள் முடிந்து வரும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதிபான்இந்தியா படமாக வெளியாகவுள்ளது.கோப்ராபடம் வெளியாகும் அதே தேதியில்அமீர் கான்நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும்லால்சிங்சத்தா மற்றும்அக்ஷய் குமார்நடிப்பில்ரக்ஷாபந்தன் ஆகிய இரு படங்களும்வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.