ADVERTISEMENT

குத்தாட்டம் போடும் தனுஷ், சிவராஜ்குமார்

07:14 PM Jan 02, 2024 | kavidhasan@nak…

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

ADVERTISEMENT

இப்படத்தின் படப்பிடிப்பில் பல சிக்கல்களைப் படக்குழு எதிர்கொண்டு படப்பிடிப்பை நடத்தி வந்தது. கடந்த அக்டோபர் மாதம் முழு படப்பிடிப்பும் நிறைவுற்றது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக முன்பு படக்குழு தெரிவித்த நிலையில், பின்பு அடுத்த மாதமான 2024 ஜனவரியில் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து ‘கில்லர் கில்லர்...’ என்ற முதல் பாடல் மற்றும் ‘உன் ஒளியிலே...’ என்ற இரண்டாவது பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. பின்பு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என ரிலீஸ் தேதியுடன் கூடிய புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. மேலும் யு/ஏ சான்றிதழுடன் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலான ‘கோரனாரு...’ பாடல் வெளியாகியுள்ளது. தனுஷும் சிவராஜ்குமாரும் சேர்ந்து ஊர் கொண்டாட்டத்தில் இருக்கும் போது இப்பாடல் வருவது போல் அமைந்துள்ளது. இப்பாடலை தேவா, சந்தோஷ் ஹரிஹரன், அலெக்சாண்டர் பாபு ஆகியோர் பாட உமா தேவி வரிகள் எழுதியுள்ளார். நாளை சென்னைநேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 6 மணி முதல் நிகழ்ச்சி தொடங்குகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT