/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/10_113.jpg)
தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். 'சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 1940களின் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பில் பல சிக்கல்களை படக்குழு எதிர்கொண்டு இப்போது முழுவீச்சில் படப்பிடிப்பை நடத்திவருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இம்மாதமும் டீசர் அடுத்த மாதமும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தைஇரண்டு அல்லது மூன்று பாகங்களாக உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகே அதனை அறிவிப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
இப்படத்தைத்தாண்டி தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படமும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படமும் இந்தியில் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதுபோக அவரது 50வது படத்தையும் கைவசம் வைத்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)