Skip to main content

‘தனியா வந்தா தலை மட்டும் உருளும்...’ - எச்சரிக்கும் கேப்டன் மில்லர்

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

captain miller first single released

 

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். 

 

ad

 

இப்படத்தின் படப்பிடிப்பில் பல சிக்கல்களைப் படக்குழு எதிர்கொண்டு படப்பிடிப்பை நடத்தி வந்தது. கடந்த மாதம் முழு படப்பிடிப்பும் நிறைவுற்றது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக முன்பு படக்குழு தெரிவித்த நிலையில், தற்போது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. 

 

இதையடுத்து முதல் பாடல் குறித்த அப்டேட் அவ்வப்போது வெளியாகி வந்த நிலையில் தற்போது லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. ‘கில்லர் கில்லர்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளார். பாடலை பார்க்கையில் வில்லன்களுக்கு தனுஷ் எச்சரிக்கை செய்யும் வகையில் உள்ளது. கபேர் வாசுகி வரிகளில் வரும், ‘தனியா வந்தா தலை மட்டும் உருளும்... நீ படையா வந்தால் சவமலை குவியும்... நீ நரியா பதுங்க ரோமம் கிழியும்... நீ எருவா பாய கொம்பும் முறியும்...’ எனும் வரிகள் கவனத்தை ஈர்த்துள்ளது.  

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீதிமன்றத்தை நாடிய தனுஷ் - ஐஸ்வர்யா

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
dhanush aishwarya rajinikanth applied divorce in court

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து 18 நவம்பர் 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். ஆனால் கடந்த 2022 ஜனவரி 17 அன்று இருவரும் பிரிய முடிவெடுத்துள்ளதாக அறிவித்திருந்தனர். அதன் படி தனித்தனியே வாழ்ந்து வந்தனர்.

தனுஷ் தற்போது தனது 50 ஆவது படமான ராயன் படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார். மேலும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். ஹீரோவாக சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா, அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் இளையராஜா பயோ-பிக், படங்களில் நடித்து வருகிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார். 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடைசியாக லால் சலாம் படத்தை இயக்கினார். கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இதில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து சித்தார்த்தை வைத்து ஒரு படமெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

இந்த நிலையில் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் 2004ல் நடைபெற்ற திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரியுள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Next Story

“எனக்கும் ஜி.விக்கு நடந்த மாதிரி நடந்தது” - ஐஸ்வர்யா ராஜேஷ்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
aishwarya rajesh speech at dear movie press meet

ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் டியர்.  வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி  மற்றும் பிருத்திவிராஜ் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படம் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் செய்தியாளர்களின் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். 

ஜி. வி பிரகாஷ் பேசியதாவது, “வாராவாராம் படம் வருதே எனக் கேட்கிறார்கள். ஆனால் இது 4 வருடமாக உழைத்து உருவான படங்கள். அதனால் அது அனைத்து வேலைகளும் முடித்து, இப்போது வருகிறது. டியர் திரைப்படம் ஐஸு ஃபிளைட்டில் என்னைப்பார்த்து இந்தக்கதை கேளுங்கள் என்றார். இவர் படத்தில் நமக்கு என்ன ரோல் இருக்கும் எனத் தயங்கினேன், ஆனால் கதை கேட்டவுடன் அழுது விட்டேன், மிகவும் பிடித்திருந்தது. உடனே நடிக்க ஒத்துக்கொண்டேன். லைவ் சவுண்ட் என்பதால் எல்லோரும் போட்டிப் போட்டு நடித்துள்ளோம்” என்றார். 

ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது, “எனக்கும் ஜி.விக்கு நடந்த மாதிரி நடந்தது. என்னையும் வெள்ளிக்கிழமை நாயகி எனக் கூப்பிட்டுள்ளார்கள். அதன் காரணங்கள் எனக்குத் தெரியும். கள்வன் படத்திற்காக ஜீவிக்கு வாழ்த்துகள். டியர் படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம். எல்லோருமே மிகவும் பிடித்து, விரும்பி நடித்த படம். இந்தப்படம் ஷுட்டிங்கே ஒரு கொண்டாட்டமாக இருந்தது. ரோகிணி மேடம் பகிர்ந்துகொள்வதைக் கேட்பதே வரம் தான். எல்லோருடன் பழகியது மிகச்சிறந்த அனுபவம்.

இந்தப்படம் எனக்கு மூன்று வருடப் பயணம். ஆனந்த் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம். வருண்! தமிழ் சினிமாவிற்கு நல்ல தயாரிப்பாளர் கிடைத்துள்ளார். அவருடன் இன்னொரு படமும் செய்துள்ளேன் விரைவில் திரைக்கு வரும். எங்கள் படத்தின் நாயகன் தூண் ஜீவி தான். நல்ல நண்பர், அவரைப்பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.  எனக்காகக் கதை கேட்டு நடித்ததற்கு நன்றி. இந்தப்படம் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்” என்றார்.