ADVERTISEMENT

"நீர்,நெருப்பு, காற்று..." - மிரட்டும் பிரம்மாஸ்திரம் படத்தின் ட்ரைலர் 

11:46 AM Jun 15, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர் 'பிரம்மாஸ்திரம்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஆலியா பட் நடிக்க, நாகார்ஜுனா அக்கினேனி, மௌனி ராய், அமிதாப்பச்சன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் மூன்று பாகங்களாக வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தியப் புராணங்கள் மற்றும் நவீன உலகம் என இரண்டும் கலந்த ஒரு படமாக உருவாகியுள்ள பிரம்மாஸ்திரத்தின் ட்ரைலர் பலரின் கவனத்தைப் பெற்று வருகிறது. சமீபகாலமாக தென்னிந்திய படங்கள் பான் இந்தியா படமாக வெளியாகி இந்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வகையில் பாலிவுட்டிலிருந்து பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT