Alia Bhatt

Advertisment

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ராஜமவுலி, ஆர்.ஆர்.ஆர். என்ற படத்தை இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் தயாராகி வரும் இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் 400 கோடியாகும். மேலும், இந்தப் படத்தில் அஜய் தேவ்கன், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர், சமுத்திரக்கனி, ஆலியா பட் உட்பட இந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் நடித்து வருகின்றனர். முழுவீச்சில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு கரோனா காரணமாக தடைபட்டது. கரோனா நெருக்கடி சற்று தளர்ந்ததும் அரசு படப்பிடிப்பு நடத்துவதற்கு அளித்த அனுமதியைடுத்து, படத்தின் பணிகளை மீண்டும் தொடங்கினார் ராஜமவுலி.

நட்சத்திர பட்டாளங்கள் அடங்கிய படம் என்பதால் ஒவ்வொரு நடிகர், நடிகைகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் தனித்தனியே படமாக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் நடிகை ஆலியா பட் இன்று ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினரோடு இணைந்துள்ளார். இத்தகவலை தயாரிப்பு நிறுவனமான டிவிவி எண்டர்டெயின்ட்மண்ட் தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ஆலியா பட் இந்தப் படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

Advertisment